திருமாலின் உக்கிர அவதாரமான நரசிம்மருக்கு, அசுரனான இரண்யனைக் கொன்ற பின்னரும் கோபம் தணியவில்லை. இதையறிந்த மகாலட்சுமி தன் கடைக்கண்ணால் அவரைப் பார்த்தாள். இரண்யனின் மகனான பிரகலாதனும் நரசிம்மரின் அருகில் வந்தான். இருவரைக் கண்ட பின்னர் நரசிம்மர் அமைதியடைந்தார். லட்சுமியைத் தன் மடியில் அமர்த்தி லட்சுமி நரசிம்மராக பிரகலாதனுக்கு காட்சியளித்தார். நரசிம்மர் தனித்து (யோகநிலையில்) இருக்கும் போது மார்பில் யோக லட்சுமியாகவும், மடியில் இருக்கும் போது சாந்த லட்சுமியாகவும் இருக்கிறாள்.