பதிவு செய்த நாள்
31
அக்
2018
01:10
நம் குழந்தைகளை “பிள்ளைகள்” என்று சொல்லும் மரபு தமிழ் உலகில் உள்ளது. பிள்ளைகள் அல்லது குழந்தைகள் உள்ளம், கள்ளம், கபடம் இல்லாதது. மாசில்லா மனம் உடையவர்கள் பிள்ளைகள் ஆவர். ஞானிகளுக்கு உவமை கூறுமிடத்து பட்டிணத்தடிகள் கூறியது இத்தருணம் நினைவு கூறத்தக்கது:
“சேய் போல் இருப்பார் கண்டீர்
உண்மை ஞானம் தெளிந்தவரே.”
மாசில்லாத மனம் உடைய பிள்ளைகளுக்கெல்லாம் தெய்வம் “பிள்ளையார்”.
அனைத்து எழுத்துக்கும், ஓசைகளுக்கும், வேதங்களுக்கும் மூலமாக விளங்குவது “ஓம்” எனும் பிரணவம். பிரணவம் தோற்றம் இல்லாதது. பிள்ளையாரும் தோற்றம் இல்லாதவர். தோற்றம் உண்டானால் முடிவு என்பது உண்டு. முதலும் முடிவும் இல்லாத முழுமுதற் கடவுள் பிள்ளையார். அம்மை அப்பன் இவரை கணங்களுக்கெல்லாம் தலைவராக்கியதால், “கணபதி, கணேசர், கணாதிபன், கணநாதர் ” என்று பெயர் பெற்றார்.
விநாயகர் முன் தோப்புக்கரணம் இடுவதால், அறிவு வளர்ச்சியும், உடல் நலமும் உண்டாகும். இவரது கருணையால் காவிரி நம் தமிழகத்தில் ஓடத் துவங்கியது. சூரிய வம்சத்தில், வழிவழியாக பூஜிக்கப்பட்ட “ஸ்ரீரங்கநாத பெருமாள் ” திருவரங்கத்தில் எழுந்தருளி, இந்த பூமியில் அருள் புரிவது விநாயகரின் கருணையாகும்.
சிவனாரிடமிருந்து, ஆத்மலிங்கத்தை ராவணன் பெற்றுக் கொண்டு வருகையில், அந்த ஆத்மலிங்கம் “கோகர்ணம்” எனும் க்ஷேத்திரத்தில் எழுந்தருளச் செய்தது விநாயகரின் கருணையே. நமக்கு “பாரதம் ” என்ற இதிகாசம் கிடைக்கப் பெற்றது விநாயகரின் அருட் கருணையே.
வன்னி பத்திரம் விநாயக பெருமானுக்கு மிக மிக உகந்தது. ஐந்து அக்னிகளுக்கு இடையில் நின்று செய்த தவப் பயனும், யாகங்கள் செய்து அடையும் புண்ணியமும் ஒரு வன்னி இலையால் விநாயகரை வழிபடுவோருக்கு உண்டாகும்.
வரலாறு: தாக்ஷாயணி, தன் தேஹத்தை யோகாக்னியில் விட்டு, மூன்று வயது சிறு பெண்ணாக ஹிமவானுக்கு அயோனிஜையாக தோன்றி, வளர்ந்து, வேத நூல்கள் பல கற்று, மணப்பருவம் அடைந்தாள், பமரசிவனையே மணக்கக் கருதிய உமா தேவி, தன் தந்தை பர்வதராஜனிடம் விருப்பத்தைத் தெரிவித்தாள். அதற்குரிய வழியைக் கேட்டாள்.
பர்வதராஜன் “பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் மூல காரணப் பொருள் விநாயகரே, அவரை ஆவணி மாத சுக்லபக்ஷ சதுர்த்தி நாளில் நினைத்து, வ்ரதம் இருந்து, முறைப்படி பூஜை செய்தால், ஸகல விக்னங்களும் நீங்கி ஸகல ஸித்திகளும் உண்டாகி, இவ்வுலகில் சுகமும் இறுதியில் மோக்ஷமும் சித்திக்கும் ” என்றார். உமாதேவி தன் தந்தையை விநாயக சதுர்த்தி வ்ரதம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்றும், இதற்கும் முன்பு யாராவது அனுஷ்டித்து இருக்கிறார்களா? என்றும் கேட்டாள்.
ஹிமவான் இவ்விரத பூஜை முறைகளை விளக்கமாக எடுத்துக்கூறி, குமாரக்கடவுள் தன் தந்தையிடம் கேட்டு, அறிந்து, அனுஷ்டித்ததையும் கூறினார். ஒரு சமயம் குமாரஸ்வாமி (முருகன்) பரமேச்வரனிடம், “தந்தையே எண்ணற்ற வ்ரதங்களுள் முதன்மையானதும், எளிதில் அனேக நன்மைகளையும் கொடுக்கும் தன்மை வாய்ந்ததும், மிகவும் மேன்மையானதும் எது?” என்று கேட்டார்.
ஆதியும் அந்தமுமில்லாத, அனைத்துலகுக்கும் ஆதார நாயகனான பரமேச்வரன் “மகனே! விநாயக சதுர்த்தி வ்ரதம் தான் ” என்றார். விநாயகர் தன் மூத்த சகோதரர். சிவனாரின் மகன். அப்படியிருக்க அவரை பூஜிப்பது முதன்மையாக கூறப்படுகிறதே என்ற சந்தேகம் தோன்றிய முருகக் கடவுளுக்கு, “மைந்தா! ஆதிபரம் பொருள், மும்மூர்த்திகளையும் தோற்றுவித்தவர். அதர்மத்தையழிக்க எத்தனையோ வேடம் பூண்ட விநாயகர் ஒரு அவதாரத்தில் என் குழந்தையாகவும் அவதரித்தார். வேதம் முழுவதும் என்னையும் விநாயகரையும் வேறுபடுத்தாது ஒன்றாகவே பாவிக்கும். எனவே அவரது வ்ரத பூஜையை செய்வது எல்லா நன்மைகளையும் கொடுக்கும்” என்றார். முருகரும் தாரகாசுரன், சூரபத்மன் இவர்களை ஜெயிப்பதற்கு முன் இவ்விரதத்தைச் செய்து வெற்றி பெற்றார்.
இவ்வளவையும் கேட்ட உமாதேவிக்கு, “இவ்விரதத்தை செய்து நீ விரும்பிய மணாளனையடையவாய்” என்று தந்தை ஹிமவான் மகள் உமாதேவியிடம் கூறினார். உமாதேவி பணியாட்களிடம் பூஜைக்கு வேண்டிய பொருள்களை கொண்டு வரும்படிச் செய்தாள். நறுமண கற்பக மலர்கள், பலவித தளிர்கள், அறுசுவை உணவுகள், மாணிக்கம், நவரத்னங்கள், புனித நீர், அருகு, வன்னி, பூமாலைகள் போன்ற பல பொருட்கள் தேவலோகம், பூலோகம், பாதாளலோகம் முதலியவற்றிலிருந்து வந்து குவிந்தன.
தங்கத்தால் அழகான மண்டபம் எழுப்பி பவழம், நவரத்னம், மாணிக்கம் முதலியவற்றாலும் புஷ்ப மாலைகளாலும் அலங்கரித்து கும்பத்தில் தாழை, நார்த்தையை கட்டினார்கள். தூண்களில் வாழை, கமுகு, கரும்பு, மாவிலைத் தோரணம் கட்டினார்கள். தூய்மையான இடத்திலிருந்து களிமண் கொண்டு வந்து, பிள்ளையார் செய்து வைத்தனர். ஹோமக் குண்டம் அமைத்து சந்தனம், பன்னீர், புனுகு கலந்து புகை மூட்டினார்கள். நவரத்ன பொடிகளால் கோலமிட்டு, பூஜைக்குரிய தங்க பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. சுவர்களில் சித்திரங்கள் வரையப்பட்டன.
உமாதேவி கங்கையில் அதிகாலையில் நீராடி விபூதி, குங்குமமிட்டுக்கொண்டு, ருத்ராட்சம் தரித்து, ஆசமனம், அந்தர், பஹிர்ந்யாஸங்கள், பூதசுத்தி, ப்ராணாயாமம், சங்கல்பம் முதலியவைகளைச் செய்தாள். சந்தப்பலகையில் வேதிகை (மேடை) அமைத்து அதன் மீது அரிசியைப் பரத்தி அதன் மீது பொன்னாடையை விரித்து அதன் மீது, நூல் சுற்றி, பஞ்சரத்னங்களுடன் நீர் நிரப்பிய, பொன்னாலாகிய குடத்தையும், தளிர்களையும், தேங்காய், தர்பை முதலியவற்றையும் வைத்து குங்குமம், சந்தன புஷ்பங்களால் அலங்கரித்து, கும்ப பூஜை செய்தாள்.
கும்பத்தின் மேற்கில் விநாயக யந்திரத்தை வைத்து, அதன் மேல் ஸ்வர்ண விநாயகரை எழுந்தருளச்செய்து பிருதிவி மூர்த்தியை (களிமண்) பொன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சங்கு தீர்த்தத்தால் தூய்மைப்படுத்தினாள். கங்கை நீரால் நிரப்பிய பஞ்சபாத்திரத்தில் அர்க்ய பாத்யத்திற்கு பச்சை கற்பூரம், குங்குமப்பூ, நீர், அரிசி, பால் தர்பைநுனி, புஷ்பம், வெண்கடுகு, நெய், எள் முதலியவற்றால் அர்க்ய பாத்ய ஆசமனம் மந்த்ரபூர்வமாக செய்து புஷ்பாக்ஷதைகளால் முறைப்படி பூஜை, ஹோமம், ஜபம், த்யானம் செய்து 16 வகை உபசாரங்களும் செய்தாள்.
மண்டபத்தின் முன் அனேக வாத்யங்கள் முழங்க வெண்பொங்கல், பால் அன்னம், சர்க்கரைப்பொங்கல், தயிரன்னம், மிளகன்னம், கடுகன்னம், எள்ளன்னம், பூசணிக்காய் முதலிய குழம்பு வகைகள், கறிவகைகள், புட்டு மா, பொரி சுண்டல், (வெல்லப்பச்சரிசி, வறுத்த பருப்பு, எள்ளு, ஏலம், தேங்காய், சர்க்கரை பயறு முதலியவற்றால் செய்த) உருண்டை, பலவகை மோதகம், அப்பம், அடை, வடை, பிட்டு, லட்டு பணியாரம், தேன்குழல், முறுக்கு, வெள்ளரிக்காய், பலாச்சுளை, மாங்கனி, வாழைப்பழம், நெய், பால், தேன், மோர், தயிர், இளநீர், கரும்புச்சாறு, சர்க்கரைப்பாகு இவைகளை மந்திரப் பூர்வமாக நிவேதனம் செய்தாள்.
சந்தனம், அகில் கருங்காலி அரச்சுனம், வில்வம் என்றும் பஞ்ச தூபங்களும் கொடுத்து, கும்ப தீபம் முதலான பல தீபங்கள் காட்டி, குடை, கண்ணாடி, தாமரை, விசிறி, கொடி, ஆலவட்டம் முதலியவைகளை உபசாரமாக காட்டினாள். பலவித ஸங்கீதங்களும் வாத்யங்களும் முழங்க நர்த்தனம் ஆடப்பட்டது. கற்பூரம் காட்டி, ப்ரதக்ஷிண நமஸ்காரம், உத்தர ந்யாஸங்கள் செய்தாள். சொர்ணமூர்த்தியை கும்பத்துடன் பூஜை செய்வித்த ஆசாரியரிடம் இன்னும் பல தானங்களுடன் கொடுத்தாள். அன்று முழுவதும் தான் விரதம் இருந்து பலருக்கும் அன்னதானம் வழங்கினாள். பிருதிவி மூர்த்தியை புனர் பூஜை செய்து மங்கள வாத்யத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நதியில் விட்டாள்.
உமாதேவி 30 நாட்கள் இவ்வாறு பூஜை செய்து, விரதம் இருந்து, கண் விழித்து விநாயகரைப் பூஜித்தாள். முப்பத்தி ஒன்றாம் நாளன்று ஆசாரியருக்குரிய தானமும், பிரம்மண, அதிதி, பரதேசி முதலியோருக்குப் போஜனமும் செய்வித்து விக்னேச்வரரை நதியில் விட்டாள். இவ்வாறு ஜகன்மாதாவான உமாதேவி விக்னேச்வர வ்ரத பூஜை செய்து தக்ஷிணாமூர்த்தியை மணந்து கொண்டாள்.
இந்த ஸித்தி விநாயக வ்ரத பூஜா மஹிமையை பார்கவ புராணமாகிய கணேச புராணத்தில் விரிவாகக் காணலாம். இதையே க்ருஷ்ணர், பஞ்சபாண்டவர்கள் முதலியவர்கள் அனுஷ்டித்து மகிழ்ந்தனர். பல ரிஷிகளாலும் தேவர்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் இந்த ஸித்தி விநாயக பூஜையை செய்பவர்கள் பல பயன்களையும் அடைவர் என்பது நிச்சயம்.
(முடியாதவர்கள், பூஜைக்கு முதல் நாளும் பூஜையன்றும் உபவாசம் இருந்து (பட்டினி கிடந்து) உறக்கம் நீக்கி பூஜித்து 21 ப்ராம்மணருக்காவது போஜனம் செய்விக்க வேண்டும்.)
நமக்கு உலகானந்தம், ஞானானந்தம் இரண்டுக்கும் விக்னம் நீங்க வேண்டும். உலக வாழ்க்கையில், முதலில் நல்ல மனைவியை அல்லது கணவனையடைவது இன்பம். அந்த இன்ப மணவாழ்க்கை தான் சதுர்முக ப்ரும்மா அனுபவிக்கும், ஆனந்தம் வரையில் கொண்டு விடும். எனவே முழுமுதற் பொருள் விநாயகரை முறைப்படி வணங்க உலகை ஆளும் ஜகன்மாதா நமக்கு உபதேசித்திருக்கிறாள். வ்யாசமுனிவர், ஸுதமுனிவருக்கு கூற, அவர் ப்ருகு முனிவருக்கு உபதேசிக்க, ப்ருகு முனிவர் இவற்றை ‘ உபாசானா லீலா ’ என்ற இரண்டு காண்டமாக ஸம்ஸ்க்ருதத்தில் எழுதி வைத்துள்ளார். அரசன் மூலம் உலகுக்கு வழங்கியிருக்கிறார். எனவே பார்கவ புராணத்திலிருந்து கூறப்பட்டிருக்கும் ஸித்திவிநாயகர் வ்ரத பூஜை மஹிமையை கேட்பவர்களும், படிப்பவர்களும் ஸகல நன்மைகளையும் நிச்சயம் அடைவர்.
விநாயக சதுர்த்தி விரதமானது அம்பிகையான பார்வதி தேவியே கடைப்பிடித்து வந்த விரதமாகும். நாம் நல்வாழ்க்கை வாழ்வதற்கு வழிகாட்டிய உயர்ந்த விரதம் இது.
விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விக்ரஹம் மண்ணினால் செய்யப்பட்டது.
மண் விக்ரஹத்தை நம் இல்லத்தில் தினப்பூஜையில் வைத்திருந்தால் முறையாகக் கோயிலில் செய்வது போல அத்தனை பூஜை முறைகளையும் செய்ய வேண்டும். அது, எல்லோராலும் முடியாது என்பதால் தான். நீரில் சேர்த்து விடுகின்றோம். இந்த சதுர்த்தி பூஜையைச் செய்துதான் பார்வதி தேவி பரமேச்வரனைக் கணவராக அடைந்தார். பார்வதி கல்யாணத்திலேயே விநாயகர் பூஜை உண்டு என்று வரலாறு கூறுகிறது.
விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடித்து உயர்ந்த நிலை அடைந்தவர்களில் பலர்; ராஜா கர்த்தமன், நளன், முருகன், மன்மதன் (உருவம் பெற்றான்), ஆதிசேஷன் தக்ஷன் மற்றும் பலர்.
நைவேத்ய கொழுக்கட்டை செய்யும் முறை
தேவையான பொருட்கள்: அரைத்த பச்சரிசி மாவு, உப்பு, நல்லெண்ணெய் தேங்காய், வெல்லம், ஏலக்காய்.
செய்யும் முறை: பச்சரிசியை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து கழுவி, கூடையில் வடிகட்டி, லேசான துணியில் அரிசியை பரப்பி ஈரம் போகும் வரை (நிழலில்) காய வைக்கவும். பிறகு, அரிசியை மாவாக திரித்து அல்லது அரைத்துக் கொள்ளவும்.
அரிசி மாவுக்கு தகுந்தாற்போல் நீரை எடுத்துக் கொண்டு, கொதிக்க வைக்கவும். அதில் சிறிது உப்பும், நல்லெண்ணையையும் விடவும். பிறகு, இறக்கி வைத்து, அரைத்த மாவை அதில் போட்டு, கிளறி (சப்பாத்தி மாவு போல) கட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை பாகாக்கி அதில் திருவிய தேங்காயை போட்டு சிறிதளவு ஏலக்காய் பொடியும் சேர்த்து பூர்ணம் செய்து கொள்ளவும். பூர்ணத்தை தேவையான அளவு உருண்டையாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு, கிளறி வைத்த மாவைக் கிண்ணம்போல் செய்து பூர்ணத்தை அதன் உள்ளே வைத்து மூடி, கூம்பு வடிவத்தில் செய்து கொள்ளவும். (மேலும் படத்தை பார்க்கவும்.) இதை இட்லி பானையிலோ அல்லது குக்கரிலோ வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். (குக்கரில் வெயிட் போடக் கூடாது.)
1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள்
1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலைப், பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்தரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப் பழம், பால், தேன், நெய், சர்க்கரை கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்: 1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய் - இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.
குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதானியங்கள், கருகு மணிமாலை, பனை ஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மாற்றுப் பொருள்கள்
பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை
1. தேனுக்குப் பதிலாக வெல்லம்
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம் முதலிய ராஜோப சாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.
இந்த பூஜைக்கு தேவையான விசேஷ பொருட்கள்: மண் பிள்ளையார், அருகம்புல், எருக்கம் பூ மாலை, குடை, 21 வகை இலைகள்:
1.மாசிப்பச்சை, 2. கண்டங்கத்திரி, 3. பில்வதளம், 4. அருகம்புல், 5. ஊமத்தை, 6. இலந்தை, 7. நாயுருவி, 8. துளசி, 9. மாவிலை, 10. அரளி , 11. விஷ்ணுக்ராந்தி, 12. நெல்லி, 13. மருக்கொழுந்து, 14. நொச்சி, 15. ஜாதி, 16. வெள்ளெருக்கு, 17. வன்னி, 18. கரிசலாங்கண்ணி, 19. வெண்மருதை, 20. எருக்கம், 21. மாதுளம்.
21 வகை புஷ்பங்கள்: 1. புன்னை 2. மந்தாரை, 3. மாதுளை, 4. மகிழம், 5. வெட்டிவேர், 6. பாதிரி, 7. தும்பை, 8. ஊமத்தை, 9. செண்பகம், 10. மாம்பூ, 11. தாழம்பூ, 12. முல்லை, 13. கொன்றை 14. எருக்கு, 15. செங்கழுநீர், 16. செவ்வந்தி, 17. வில்வம், 18. அரளி, 19. முல்லை, 20. பவழமல்லி, 21. ஜாதிமல்லி.
நறுமண கற்பக மலர்கள், பலவித தளிர்கள், அறுசுவை உணவுகள், மாணிக்கம், நவரத்னங்கள், புனித நீர், அருகு, வன்னி, பூமாலைகள் போன்ற பல பொருட்கள் தேவலோகம், பூலோகம், பாதாளலோகம் முதலியவற்றிலிருந்து வந்து குவிந்தன.
தங்கத்தால் அழகான மண்டபம் எழுப்பி பவழம், நவரத்னம், மாணிக்கம் முதலியவற்றாலும் புஷ்ப மாலைகளாலும் அலங்கரித்து கும்பத்தில் தாழை, நார்த்தையை கட்டினார்கள். தூண்களில் வாழை, கமுகு, கரும்பு, மாவிலைத் தோரணம் கட்டினார்கள். தூய்மையான இடத்திலிருந்து களிமண் கொண்டு வந்து, பிள்ளையார் செய்து வைத்தனர். ஹோமக் குண்டம் அமைத்து சந்தனம், பன்னீர், புனுகு கலந்து புகை மூட்டினார்கள். நவரத்ன பொடிகளால் கோலமிட்டு, பூஜைக்குரிய தங்க பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. சுவர்களில் சித்திரங்கள் வரையப்பட்டன.
உமாதேவி கங்கையில் அதிகாலையில் நீராடி விபூதி, குங்குமமிட்டுக்கொண்டு, ருத்ராட்சம் தரித்து, ஆசமனம், அந்தர், பஹிர்ந்யாஸங்கள், பூதசுத்தி, ப்ராணாயாமம், சங்கல்பம் முதலியவைகளைச் செய்தாள். சந்தப்பலகையில் வேதிகை (மேடை) அமைத்து அதன் மீது அரிசியைப் பரத்தி அதன் மீது பொன்னாடையை விரித்து அதன் மீது, நூல் சுற்றி, பஞ்சரத்னங்களுடன் நீர் நிரப்பிய, பொன்னாலாகிய குடத்தையும், தளிர்களையும், தேங்காய், தர்பை முதலியவற்றையும் வைத்து குங்குமம், சந்தன புஷ்பங்களால் அலங்கரித்து, கும்ப பூஜை செய்தாள்.
கும்பத்தின் மேற்கில் விநாயக யந்திரத்தை வைத்து, அதன் மேல் ஸ்வர்ண விநாயகரை எழுந்தருளச்செய்து பிருதிவி மூர்த்தியை (களிமண்) பொன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சங்கு தீர்த்தத்தால் தூய்மைப்படுத்தினாள். கங்கை நீரால் நிரப்பிய பஞ்சபாத்திரத்தில் அர்க்ய பாத்யத்திற்கு பச்சை கற்பூரம், குங்குமப்பூ, நீர், அரிசி, பால் தர்பைநுனி, புஷ்பம், வெண்கடுகு, நெய், எள் முதலியவற்றால் அர்க்ய பாத்ய ஆசமனம் மந்த்ரபூர்வமாக செய்து புஷ்பாக்ஷதைகளால் முறைப்படி பூஜை, ஹோமம், ஜபம், த்யானம் செய்து 16 வகை உபசாரங்களும் செய்தாள்.
மண்டபத்தின் முன் அனேக வாத்யங்கள் முழங்க வெண்பொங்கல், பால் அன்னம், சர்க்கரைப்பொங்கல், தயிரன்னம், மிளகன்னம், கடுகன்னம், எள்ளன்னம், பூசணிக்காய் முதலிய குழம்பு வகைகள், கறிவகைகள், புட்டு மா, பொரி சுண்டல், (வெல்லப்பச்சரிசி, வறுத்த பருப்பு, எள்ளு, ஏலம், தேங்காய், சர்க்கரை பயறு முதலியவற்றால் செய்த) உருண்டை, பலவகை மோதகம், அப்பம், அடை, வடை, பிட்டு, லட்டு பணியாரம், தேன்குழல், முறுக்கு, வெள்ளரிக்காய், பலாச்சுளை, மாங்கனி, வாழைப்பழம், நெய், பால், தேன், மோர், தயிர், இளநீர், கரும்புச்சாறு, சர்க்கரைப்பாகு இவைகளை மந்திரப் பூர்வமாக நிவேதனம் செய்தாள்.
விரதமுறையில் சொல்லியபடி விநாயகரை அலங்கரித்து வைக்கவும்.
3. நைவேத்ய பொருட்கள்: சாதம், நெய், பருப்பு, பாயஸம், உளுந்து வடை, அப்பம், இட்லி, கொண்டைக்கடலை சுண்டல், கொழுக்கட்டை, தேங்காய், வாழைப்பழம், இலந்தைப் பழம், நாவற்பழம், கொய்யாப்பழம் மற்றும் இதர பழங்கள்.
4. எருக்கம் பூவால் அர்ச்சனை செய்வது விசேஷம்.