பதிவு செய்த நாள்
12
நவ
2018
12:11
சிறுமுகை: சிறுமுகையில், சக்தி மெயின் ரோட்டில் சக்தி விநாயகர் கோவிலும், மகாசக்தி மாரியம்மன் கோவிலும் உள்ளன. இங்கு, திருப்பணிகள் முடிந்ததையடுத்து, 14ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.இதற்கான விழா திருவிளக்கு ஏற்றுதலும், புனித நீர் வழிபாடுடனும் நேற்று (நவம்., 11ல்) துவங்கியது.
இன்று (நவம்., 12ல்) காலை, மகாகணபதி வேள்வியும், காப்புக் கட்டுதலும், கோ பூஜையும் நடைபெற உள்ளன. தொடர்ந்து புண்ணிய நதிகளின் தீர்த்தங்களும், முளைப்பாலிகையையும் ஊர்வலமாக அழைத்து வரப்பட உள்ளது.மாலையில் முதல் கால வேள்வி வழிபாடு துவங்குகிறது.
நாளை (நவம்., 13ல்) காலை இரண்டாம் கால வேள்வியும், பரிவார மூர்த்திகளுக்கு மருந்து சாற்றுதலும், விமான கலசமும் நிறுவப்பட உள்ளன. 14ம் தேதி அதிகாலை நான்காம் கால
வேள்வியும், காலை, 6:35லிருந்து, 7:15 மணிக்குள் விமானம் மற்றும் மூலவர்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சாந்தலிங்க மருதாசல அடிகளார், பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகளார் கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளனர்.