உடுமலை:உடுமலையில், உலக நன்மைக்காக ஸ்ரீசத்யசாய் மந்திர் சார்பில் ஸ்ரீசத்யசாய் அகண்ட பஜன் நடந்தது.உடுமலையில், சாய்ராம் லே-அவுட்டில் ஸ்ரீசத்யசாய் மந்திர் செயல்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் உலக நன்மைக்காக ஸ்ரீசத்யசாய் மந்திர் சார்பில் அகண்ட பஜன் நடத்தப்படுகிறது.அதன்படி, ஸ்ரீசத்யசாய் மந்திரில் இரண்டு நாட்களாக ஸ்ரீசத்ய சாய் அகண்ட பஜன் நடந்தது.
நேற்றுமுன்தினம் (நவம்., 10ல்) மாலை, 6:00 மணிக்கு துவங்கி, 9:00 மணி வரைக்கும், நேற்று (நவம்., 11ல்) காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையிலும் பஜனை நடந்தது. பஜனையில் பக்தர்கள் சாய்ராமின் புகழ்பரப்பும் பாடல்களை பாடி தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.