Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4  சுவாதி, விசாகம் 1, 2, 3) சுக்கிரனால் ஆதாயம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1, 2, ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
கன்னி: (உத்திரம் 2, 3, 4 அஸ்தம், சித்திரை 1, 2) அரசு வகையில் அனுகூலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2, 3, 4 அஸ்தம், சித்திரை 1, 2) அரசு வகையில் அனுகூலம்

பதிவு செய்த நாள்

12 நவ
2018
12:11

சுக்கிரன் 2-ம் இடத்தில் இருக்கும் நிலையில் இந்த மாதம் மலர்கிறது. இதனால் பணவரவு அதிகரிக்கும். மக்கள் மத்தியில் அந்தஸ்து கூடும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். சூரியன் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருக்கிறார். சூரியனால் பொருளாதார வளம் கூடும். உடல்நலம் சிறப்படையும்.

உங்கள் ஆட்சி கிரகமான புதன் வக்கிரம் அடைந்து 2ம் இடத்தில் இருப்பதால் அவப்பெயர் வரலாம். செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அவர் டிச.8ல் வக்கிர நிவர்த்தி அடைவதால் விருச்சிகத்திற்கு மாறுகிறார். உங்கள் நட்பு கிரகமான செவ்வாய் 6-ம் இடத்தில் இருக்கிறது. இதனால் அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். முயற்சியில் எந்தவித பின்னடைவும் ஏற்படாது. மனதில் துணிச்சல் பிறக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். ராகுவால் பொன், பொருள் சேரும்.  பெண்கள் மிக உறுதுணையாக செயல்படுவர்.  

குடும்பத்தில் வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். கணவன், மனைவி இடையே  மனக்கசப்புகள் அவ்வப்போது வரலாம். ஒருவருக்கொருவர் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும் டிச.2,3 ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். நவ.27,28ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் டிச. 8,9,10ல் உறவினர்கள் வகையில் இருந்து சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.

அரசு பணியாளர்கள் சுக்கிரனால் நல்ல முன்னேற்றம் காண்பர்.  அதிகாரிகளின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.  விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சீரான வளர்ச்சி காண்பர். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு பொறுமை, நிதானம் தேவை. பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். நவ.25,26 நன்மை தரும் நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். டிச.7க்கு பிறகு அரசு வேலையில்
இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் சிறக்கும். அரசின் சலுகை கிடைக்கும். விரிவாக்கப்பணிக்காக விண்ணப்பித்த வங்கி கடனுதவி எளிதாக கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். நவ.17, டிச.13,14,15ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். ஆனால் நவ.29,30,டிச.1,4,5ல் சந்திரனால் தடைகள் வரலாம்.  

கலைஞர்கள் உற்சாகத்துடன் செயல்படுவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.  புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். மாணவர்கள் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் விடாமுயற்சி தேவைப்படும். ஆனால் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலும், அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். சொத்து வாங்கும் எண்ணம் தற்போது நிறைவேறும். பக்கத்து நிலத்துக்காரர்கள்  உதவிகரமாக செயல்படுவர். வழக்கு, விவகாரங்களில்  சாதகமான முடிவு கிடைக்கும்.

பெண்கள் புத்தாடை, அணிகலன்கள் பெற்று குதுாகலம் அடைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். நவ.18,19,20 சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். டிச.6,7ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம்.  தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

* நல்ல நாள்: நவ.17, 18, 19, 20, 25, 26, 27, 28, டிச.2, 3, 6, 7, 13, 14, 15
* கவன நாள்: நவ. 21, 22 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 1,9
* நிறம்: வெள்ளை, சிவப்பு

* பரிகாரம்:
● சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசிமாலை
● வியாழனன்று தட்சிணாமூர்த்தி  அர்ச்சனை
● தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar