Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், அயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2, 3, 4 அஸ்தம், சித்திரை 1, 2) அரசு வகையில் அனுகூலம் கன்னி: (உத்திரம் 2, 3, 4 அஸ்தம், சித்திரை 1, ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குடும்பத்தில் மகிழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குடும்பத்தில் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

12 நவ
2018
12:11

முக்கிய கிரகங்களான சுக்கிரன், கேது நன்மை தந்து கொண்டிருக்கிறார்கள். கல்விகாரகனான புதன் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் வக்கிரம் அடைந்து இருக்கிறார். பகைவரால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆனாலும் புதன் டிச.8ல் வக்கிர நிவர்த்தி  அடைந்து விருச்சிகத்திற்கு சென்ற பின் நிலைமை சீராகும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ராசி நாயகனான சூரியன் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். இதனால் பெண்களிடம் விரோதம் ஏற்படலாம். செவ்வாயால் வீண்அலைச்சல், மனவேதனை உருவாகலாம்.

கேதுவால் பொருளாதார வளம் சிறக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். சுக்கிரனின் பலத்தால் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் கணவன், மனைவியிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். டிச.7க்கு பிறகு அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். நவ.29,30, டிச.1ல் சகோதர வழியில் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். நவ.25,26ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் டிச.6,7ல் அவர்கள் வகையில் பிரச்னை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்களுக்கு வேலையில் பொறுமை, நிதானம் தேவை. பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். டிச.7க்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம்.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் நற்பலனைக் காணலாம். வேலைப்பளு குறையும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். நவ.14,15 சிறப்பான நாட்களாக அமையும்.  

வியாபாரிகளுக்கு பெண்கள் வகையில் தொல்லை குறுக்கிடலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். தொழிலில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டாம். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். டிச.7க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும். டிச.5,6ல் எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்கும். நவ.18,19, டிச.7,8ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். ஆடம்பர வசதிகளை பெற்று வாழ்வீர்கள். ரசிகர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். சமூகநல சேவகர்களின் எதிர்பார்ப்பு ஈடேறும். டிசம்பர் 7,8 ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். டிச.7க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு துணைநிற்கும்.

விவசாயிகள் சிறப்பான மகசூல் பெறுவர். கேழ்வரகு, சோளம் காய்கறி, பழவகைகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.  டிச.7க்கு பிறகு சொத்து வாங்க யோகமுண்டு. வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.  

பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.  குழந்தைகளால் பெருமை சேரும். டிச.7 க்கு பிறகு அந்தஸ்து அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். நவ.17, டிச.14,15ல் சிறப்பான பலனைக் காணலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும்.  டிச.4,5ல் ஆடை, அணிகலன்கள் வாங்கலாம்.

* நல்ல நாள்: நவ.17, 24, 25, 26, 27, டிச.3, 4, 5, 6, 9, 10, 14, 15  
* கவன நாள்: நவ.18, 19, 20 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்:5, 6
* நிறம்: வெள்ளை, சிவப்பு

* பரிகாரம்:
● சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம்
● வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
● செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம்

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar