திருக்கோவிலூர்:திருக்கோவிலூரில், திருவாவடுதுறை சைவத் திருமுறை நேர்முக பயிற்சி வகுப்பில் சைவ பக்தர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.திருவாவடுதுறை ஆதீன சைவத் திருமுறை நேர்முக பயிற்சி, திருக்கோவிலூர் பாலசுப்ரமணியர் கோவில் வளாகத்தில் நேற்று (நவம்., 11ல்) நடந்தது. இரண்டு ஆண்டுகள் நடைபெறும் இந்த பயிற்சியில் ஏராளமான சைவ பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஓதுவார் வசந்திமுத்துக்குமாரவேல் திருமுறை பாடல்களை பண்-ராகமாக பயிற்றுவித்தார். பேராசிரியர் முருகப்பன் பாடல்களுக்கு விளக்கம் அளித்தார். அமைப்பாளர் ஆசைதம்பி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இப்பயிற்சி கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.இதில் ஏராளமான சைவ பக்தர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.