கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவிலில் குளிர்ச்சி திருவிழா மாவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2018 03:11
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், குளிர்ச்சி திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு மா விளக்கு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், மகிளிப்பட்டி, சிந்தலவாடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சார்பில், அம்மனுக்கு குளிர்ச்சி திருவிழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மாவிளக்கு பூஜை நடந்தது.
பின், ஆடு, கோழிகளை பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், 100க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.