பதிவு செய்த நாள்
13
நவ
2018
02:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் அருகே அமைந்துள்ள, அம்ருதபுரி ஸ்ரீராமானுஜ யோகவனத்தில், நாளை, (நவம்., 14ல்) மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டிலிருந்து, வேடந்தாங்கல் செல்லும் வழியில், படாளம் கூட்டு ரோட்டில் இருந்து, 2 கி.மீ.,யில் உள்ள வையாவூரில், அம்ருதபுரி ஸ்ரீராமானுஜ யோகவனம் அமைந்துள்ளது. சீதாராம சுவாமி மற்றும் தாரா மாதா ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட, ஸ்ரீனிவாச நிகேதனம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில், ஏழைகளுக்கு பல சேவைகள் செய்யப்படுகின்றன.
யோகவனத்தில், கறவை நின்ற பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. அங்கு, முனீஸ்வரன், யோக நரசிம்மர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீனிவாச பெருமான், மதுரவல்லி தாயார் ஆகியோரு க்கு சிறப்பான சன்னதிகள் உள்ளன.மேலும், சித்தர்கள் பலருக்கும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் சிலைகள் உள்ளன.இந்த கோவிலில், நாளை 14ல் காலை, 9:00 மணி முதல், 10:30 மணி வரை, மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பாத யாத்திரைஉலக அமைதிக்காக, சீதாராம சுவாமி மற்றும் தாரா மாதா தலைமையில், ஆண்டு தோறும், சென்னை, நுங்கம்பாக்கத்திலிருந்து, அம்ருதபுரி வரை, பக்தர்கள் பாத யாத்திரை நடக்கிறது. திருவிளக்கு பூஜை மற்றும் திருவோண நட்சத்திர நாளில், சுவாமியின் அருள் வாக்கு போன்ற விசேஷங்களும், இந்த கோவிலில் நடைபெறுகின்றன.