திருக்கோவிலூர் வித்யா கணபதி கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2018 02:11
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர்‚ சந்தப்பேட்டை‚ வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி வளாக த்தில்‚ புதிதாக‚ வித்யாகணபதி கோவில் கட்டப்பட்டது. இதற்கான கும்பாபிஷேகம் 9ம் தேதி நடந்தது.
முன்னதாக கணபதி ஹோமம்‚ யாகசாலை பூஜையும்‚ 9ம் தேதி காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாகுதி‚ கடம் புறப்பாடாகி‚ சிவாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க மூலகலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
பள்ளியின் அறக்கட்டளை தலைவர் பாரஸ்மல்ஜெயின்‚ செயலர் மதிவாணன்‚ தாளாளர் சுனில்குமார்‚ பள்ளி முதல்வர் அருள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள்‚ ஆசிரியர்கள்‚ மாணவர்கள்‚ பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.