பதிவு செய்த நாள்
13
நவ
2018
02:11
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, வைகுந்தம் சேத்துமுட்டி செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா கடந்த, 31ல் பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. நாளை (நவம்., 14ல்) காலை அம்மனுக்கு, முளைப்பாரி மற்றும் சத்தாபரணம் அழைத்து வலம் வருதல், 15 காலை அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு, பூங்கரகம், அலகு குத்துதல் நடைபெறும். 16ல், காலை தீ மிதித்தல், மாலையில் கம்பம் பிடுங்கி ஏரியில் விடுதல், 17 காலை மஞ்சள் நீராடுதல், மதியம் எருதாட்டம் நடைபெறும். 18 மதியம் வழுக்கு மரம் ஏறுதல், உரியடி, வண்டி வேடிக்கை நடைபெறும்.