பதிவு செய்த நாள்
15
நவ
2018
02:11
கள்ளக்குறிச்சி:உலகங்காத்தானில் மாரியம்மன் உள்ளிட்ட நான்கு தெய்வங்களுக்கு கும்பாபி ஷேகம் நேற்று (நவம்., 14ல்) நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் மந்தைவெளி பகுதியில் மகாகணபதி, சுப்ரமணியர், மாரியம்மன், ஆதிபராசக்தி மற்றும் பரிவார தெய்வங்கள் அமைத்து கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வேத சிவாகம முறைப்படி, கும்பாபிஷேக பெருவிழா நான்கு காலங்களாக பிரித்து பூஜைகள் நடத்தினர். கடந்த 12-ம் தேதி மகாபூர்ணாஹீதிக்குப்பின், புதிய சிலைகள் கரிக்கோலம் கொண்டுவரப்பட்டு, மகாகணபதி, மகாலட்சுமி, நவக்கிரக யாகம் நடந்தது.
அன்று இரவு முதல் தனித்தனியாக யாகங்கள் வளர்த்து, பிரதிஷ்டை செய்யப்பட உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வைக்கப்பட்டது.வெளியூரிலிருந்து வரவழைக்கப் பட்ட யானைக்கு நேற்று (நவம்., 14ல்) காலை கஜபூஜையும், ஆன்மிக ஊர்வலமும் நடந்தது. அதனைத்தொடர்ந்து கோவில் விமானங்களுக்கும், கோவில் விமானங்களுக்கும், மூலவர் தெய்வங்களுக்கும், புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேக வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (நவம்., 15ல்) முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜைகளும் நடக்கிறது.