பதிவு செய்த நாள்
15
நவ
2018
02:11
ராசிபுரம்: கந்தசஷ்டி விழாவையொட்டி, ராசிபுரத்தில் வள்ளி தெய்வானையுடன், பாலசுப்ர மணியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. முருகன் அசுரர்களுடன் போர் புரிந்து அழித்ததை, கந்த சஷ்டி விழாவாக ஆண்டுதோறும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி, முதல்நாள் சூரசம்ஹாரம், மறுநாள்திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். ராசிபுரம், எல்லை மாரியம்மன் கோவில் பாலசுப்ரமணி சுவாமிக்கு, கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக யாக சாலை அமைத்து, அதில் பல்வேறு யாகங்கள் நடந்தன. நேற்று, 14 ல் பாலசுப்ரமணியர் வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் அம்மி, உலக்கை வைத்து பாரம்பரிய முறைப்படி சீர்வரிசைகள் வைத்து பெண் அழைப்பு, அதையடுத்து, திருக்கல்யாண உற்வசம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.