பதிவு செய்த நாள்
16
நவ
2018
01:11
சென்னை: ராஜா அண்ணாமலைபுரம் அய்யப்பன் கோவிலில், நாளை முதல் மண்டல பூஜை விழா துவங்குகிறது.சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ளது, அய்யப்பன்கோவில். வடசபரி என அழைக்கப்படும் இக்கோவிலில், ஆண்டுதோறும் மண்டல பூஜை விழா,கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து, 41 நாட்கள் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை விழா, நாளை நவம்., 17துவங்குகிறது. விரதமிருந்து இருமுடி கட்டும் பக்தர்கள், 18ம் படியேறி, தினமும் காலை, 7:00 மணிமுதல், 12:00 மணிவரை அய்யப் பனுக்கு நெய்யபிஷேகம் செய்து தரிசிக்கலாம்.மேலும், மண்டல பூஜையை முன்னிட்டு, நாளை நவம்., 17 முதல், 27 நாட்கள் லட்சார்ச்சனையும் நடத்தப்படுகிறது. மண்டல பூஜை காலத்தில், கோவில் நடை காலை, 5:00 மணி முதல், 12:00 மணிவரையிலும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 9:00 மணிவரையிலும் திறந்திருக்கும். இவ்வாறு, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.