பதிவு செய்த நாள்
17
நவ
2018
02:11
அன்னூர்: சாலையூர் சித்தி விநாயகர் கோவிலில், வரும் 19ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. ஆம்போதி ஊராட்சி, சாலையூரில், பழமையான சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல லட்சம் ரூபாயில், புதிதாக கர்ப்ப கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், கோபுரங்கள் அமைக்கப்பட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டன.இதையடுத்து கும்பாபிஷேக விழா நாளை (18ம் தேதி) துவங்குகிறது.
காலையில், விநாயகர் வழிபாடு, நவகிரக ஹோமம், பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல், மாலையில், முதற்கால வேள்வி பூஜை, திருமுறை பாராயணம் நடக்கிறது.19ம் தேதி காலை 7:00 மணிக்கு கோபுர விமானம் மற்றும் சித்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் மகா அபிஷேகம், அலங்காரம் நடக்கின்றன.