கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மகுமாரிகள் தலைவி ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2018 12:11
நடுவீரப்பட்டு: கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மகுமாரிகள் கீதாபாடசாலைகளை மாவட்ட தலைவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுவீரப்பட்டு, குறிஞ்சிப் பாடி, அங்குசெட்டிபாளையம், புதுப்பேட்டை, வீரப்பெருமாநல்லூர் பகுதிகளில் உள்ள பிரம்ம குமாரிகள் கீதா பாடசாலைகளை மாவட்ட தலைவி கடலூர் ஜானகி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் துபாய் பிரம்மகுமாரிகள் அமைப்பின் அமைப்பாளர் வீரமணி கலந்து கொண்டு பாடசாலைகளில் உள்ளவர்களிடம் அமைப்பை பற்றி விளக்கி பேசினார். இதில் பாதிரிகுப்பம் ராமலிங்கம், நடுவீரப்பட்டு ரத்தினவேல், வைத்திலிங்கம், ரத்தினசபாபதி, சாந்தி, புனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.