சோழவந்தான்: சபரிமலையின் பாரம்பரியத்தை பாதுகாக்க வலியுறுத்தி சோழவந்தானில் ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் சரண கோஷ ஊர்வலம் நடந்தது.
பதஞ்சலி நிர்வாகி சுப்ரமணியன் துவக்கி வைத்தார். சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சபரிமலை புனிதம் காப்போம் என்ற பதாைக களை ஏந்தி, சரண கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் தனசேகரன், ராஜா செய்திருந்தனர்.