சபரிமலையில் பக்தர்கள் அவதி: பிரதமருக்கு இருமுடி பார்சல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2018 11:11
ராமேஸ்வரம்: சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் அவதிப்படுவதை தடுக்காத பிரதமர் மோடிக்கு இந்து மக்கள் கட்சியினர் இருமுடியை பார்சல் அனுப்பினர். பாரம்பரியமிக்க சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை தடுக்கும் பக்தர்களை கேரளா அரசு கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இதனால் பக்தர்கள் பாதிப்பதை தடுக்க அவசர சட்டம் பிறப்பித்து சபரிமலை கோயில் புனிதம் காக்க மத்திய அரசு தவறியது. ஆகையால், பக்தரின் அவதியை உணரும் வகையில் பிரதமர் மோடிக்கு இருமுடியை அனுப்பி, சபரிமலைக்கு பிரதமர் வரவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் நேற்று ராமேஸ்வரம் தபால் அலுவலகம் முன்பு நெய் தேங்காய், விபதி, இருமுடி பைக்கு தீபாரதனை நடத்தினர். பின் பிரதமர் அலுவலகத்திற்கு இருமுடி பையை பார்சல் சர்வீசில் அனுப்பினர். இதில் இந்து மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பிரபாகரன், ராமேஸ்வரம் நகர் தலைவர் நம்புகார்த்திக், செயலர் காளீஸ்வரன், பலர் பங்கேற்றனர்.