சபரிமலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டம் இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2018 12:11
திருவனந்தபுரம், சபரிமலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தும் எண்ணம் இல்லை என்று கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக அறிவித் தார்.
சபரிமலை பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:சபரிமலையில் போலீசின் செயல்பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துஉள்ளது. உண்மையான பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சபரிமலை போகக்கூடாது, அங்கு காணிக்கை போடக்கூடாது என்று சிலர் அறிவிப்புகளை வெளியிட்டனர். இதையெல்லாம் மீறி பக்தர்கள் சபரிமலை வருகின்றனர். அவர்களுக்கு போலீசார் உதவுகின்றனர்.தளர்வு இல்லைகாங்கிரசும், பா.ஜ., வும் சபரிமலையில் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர். கேரளாவில் எங்கும் நாமஜெபம் நடத்த தடை இல்லை. ஆனால் சபரிமலையில் நாமஜெபம் நடத்தினால்போராட்டக்காரர்கள் கூடிவிடுவர்.சபரிமலையில் இன்றைய சூழ்நிலையில் போலீசின் கட்டுப்பாடுகள் அவசியம். அதை தளர்த்த வேண்டிய தேவை வரவில்லை. நீதிமன்றமும் கட்டுப்பாடுகளை தளர்த்த சொல்லவில்லை.காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை விட இடது முன்னணி ஆட்சி காலத்தில்தான் சபரிமலைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஒத்திவைப்புகேரளத்தில் காங்., வீழ்ந்து பா.ஜ., வளர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் ஒருபோதும் விரும்பியதில்லை. பா.ஜ.,வுடன் இணைந்து செயல்படுவது காங்கிரசை தகர்க்கும். இவ்வாறு முதல்வர் பதிலளித்தார். தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.