பதிவு செய்த நாள்
26
நவ
2018
02:11
இடைப்பாடி: இடைப்பாடி, தாவாந்தெரு, காளியம்மன், பஞ்சமுகவிநாயகர், முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஐந்து நாட்களாக நடந்த, ஆறுகால பூஜையின் இறுதியாக, கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, திரண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீரை தெளித்தனர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், தலைவாசல் அருகே, வீரகனூர், சந்தைப்பேட்டையில், புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. அதையொட்டி, புத்துக்கு, மஞ்சள், குங்குமம் தெளித்து, பூக்களால் அலங்கரித்து, பால் ஊற்றி வழிபட்டனர். விழாவுக்கு ஏற்பாடு செய்த, அம்மன் சிலைக்கு, சிறப்பு பூஜை நடந்தது.