சீராப்பள்ளி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2018 02:11
நாமகிரிப்பேட்டை: சீராப்பள்ளி, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று கும்பாபி ஷேக விழா நடந்தது. நாமகிரிப்பேட்டை அடுத்த, சீராப்பள்ளியில் உள்ள, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை, 10:30 மணிக்கு நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு மங்கள இசை, கணபதி பூஜையுடன் யாகம் ஆரம்பமானது. 10:30 மணிக்கு திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடந்தது. மாலையில், வீர குமாரர்கள் கத்தி போட்டு நடனமாடி வீதி உலா வந்தனர். அப்போது சிலர் வீரமுட்டி சுவாமி வேடமணிந்து வந்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த, தரையில் படுத்து வயிற்றில் வாழைக்காய் வைத்திருந்தனர். அப்போது, வீரமுட்டி வேடமணிந்தவர்கள் கூர்மையான கத்தியால் வாழைக்காயை மட்டும் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.