சித்தாமூர்: பெருங்கருணை மரகத தண்டாயுதபாணி கோவில், இந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது; நடுப்பழனி என அழைக்கப்படுகிறது. இங்கு, 17ம் ஆண்டு குருபூஜை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.மங்கள இசையுடன் ஆரம்பித்த சிறப்பு வழிபாடுகளில், மஹா அபிஷேகம், அன்ன பிரசாதம் போன்றவையும் நடந்தது.