வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2012 10:02
திருச்செந்தூர்:திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடந்தது. திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கொடிபட்டம் கந்த பல்லக்கில் ஒன்பது சந்திகளும் சுற்றி வந்து கோயிலை அடைந்தது. தொடர்ந்து 5.30 மணியளவில் கொடியேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சோடஷ அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. தீபாராதனையை தொடர்ந்து கொடி மரத்திற்கு திருபாராயணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் முருகன் கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் இணை ஆணையர் சுதர்சன், கோயில் அலுவலக கண்காணிப்பாளர் செல்வக்குமாரி, டவுன் பஞ்., தலைவர் சுரேஷ்பாபு உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு தினசரி காலையும் மாலையும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா நிகழ்ச்சியும், கோயில் வளாகத்தில் சமய சொற்பொழிவும் நடக்கிறது. விழாவின் 10ம் நாள் திருநாள் அன்று அதிகாலை 5.30 மணிக்கு வெயிலுகந்தம்மனுக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர் செய்து வருகின்றனர்.