எட்டயபுரம்:எட்டயபுரத்தில் கோட்டை முத்து இருளப்பசுவாமி காடுதாங்கி திருவிழா இரு நாட்கள் நடக்கிறது. எட்டயபுரத்தில் அருந்ததியர் சமுதாயத்தினர் கோட்டை முத்து இருளப்ப சுவாமி காடுதாங்கி திருவிழா வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நடக்கிறது. வரும் 20ம் தேதிமதியம் எட்டயபுரத்திலிருந்து சுவாமி கொண்டாடிகள் கால்நடையாக அருங்குளம் கிராமத்திற்கு சென்று அங்கு காடுதாங்கி செய்து வைத்திருப்பதை காளியம்மன் கோயிலுக்கு கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் செய்து கண்திறப்பு வைபவம் நடக்கும். வரும் 21ம் தேதி சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்து அன்று மாலையில் காளியம்மன் கோயிலிலிருந்து காடுதாங்கி விளாத்திகுளம் எட்டயபுரம் மெயின் ரோடு வழியாக திருவீதி உலா நடக்கிறது. பின்னர் எட்டயபுரம் சமஸ்தானம் அரண்மனை கோட்டைக்குள் அமைந்துள்ள கோட்டைமுத்து இருளப்பசுவாமி கோயிலுக்கு வந்து அன்று இரவு காடு தாங்கி, முத்து இருளப்பசுவாமி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். ஏற்பாடுகளை எட்டயபுரம் அருந்ததியர் சமுதாய விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.