புதுச்சேரி:புதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில், 13ம் ஆண்டு அய்யப்ப பூஜை நடந்தது. எல்லப்பிள்ளைச் சாவடியில் அமைந்துள்ள சாரதாம்பாள் கோவிலில், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் ஒன்றிணைந்து, பூஜை நடத்துவர். அந்த வகையில் 13ம் ஆண்டாக அய்யப்ப பூஜை நேற்று முன்தினம் (டிசம்., 9ல்) நடந்தது.பூஜையை யொட்டி 18 படிகளுடன் அய்யப்ப சுவாமிக்கு அலங்காரம் நடந்தது. ஜெயக்குமார் குருக்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் பங்கேற்று, சரண கோஷங்கள் முழங்க பூஜை செய்தனர்.