கொடுமுடி: சக்தி மாரியம்மன் கோவில் குண்டம் இறங்கும் விழாவில், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கொடுமுடி வட்டாரம், சின்னாக்கண்டனூரில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. பொங்கல் விழா கடந்த, 9ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 10ல் காலை காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதலும், 11 காலை, 9:00 மணிக்கு தீர்த்தம் எடுத்தல், இரவு, 7:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும், நேற்று மாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று கிடா வெட்டுதல், பொங்கல் மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.