விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி நாயிகா சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ஸ்ரீமத் பாகவத ஏகாதச ஸ்கந்தம் உபன்யாச நிகழ்ச்சி நடைபெற்றது.விழுப்புரம் ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கடந்த 5ம் தேதி முதல் நேற்று வரை தினந்தோறும் மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 வரை ரங்கன் ஜீயின், ஸ்ரீமத் பாகவத ஏகாதச ஸ்கந்தம் (உத்தவ கீதை) நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஆய்வாளர் செல்வராஜ், செயல் அலுவலர் ஜெயக்குமார், வாசு பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.