பதிவு செய்த நாள்
18
டிச
2018
10:12
இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 2ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் தொடர்ந்து நன்மை தருவதால் இந்த மாதம் சிறப்பாக அமையும். மேலும் புதன் டிச.28க்கு பிறகு நன்மை தருவார். எடுத்த முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். பொன், பொருள் கிடைக்கும். பெண்கள் மிக உறுதுணையாக செயல்படுவர்.
உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகமுண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். மாதத் தொடக்கத்தில் அண்டை வீட்டாரின் தொல்லை மறையும். சுக்கிரனால் அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். டிச.29,30ல் சகோதர வகையில் நன்மை ஏற்படும். அவர்களால் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். டிச.25,26ல் விருந்தினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜன.5,6ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். டிச.28க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணியாளர்களில் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை டிச.17க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். டிச.28க்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். அரசு வேலையில் இருப்பவர்கள் நற்பெயர் காண்பர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். டிச.23,24ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.
வியாபாரத்தில் பகைவர் சதி எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். ஆனால் பெண்களிடம் விரோதம் ஏற்படலாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். டிச.28 வரை அரசு வகையில் சிலர் சோதனைக்கு ஆளாகலாம். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். டிச.28 க்குப் பிறகு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். வியாபாரத்தை பெருக்கி கொள்ளலாம். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். ஜன.10,11ல் எதிர்பாராத வகையில் பணம் வரும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நல்ல வருவாயும் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் தீவிர முயற்சி எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. ஜன.5,6ல் வீண்குழப்பம், மனஉளைச்சல் ஏற்படலாம்.
மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். டிச.28 வரை சிரத்தையுடன் படிப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்பது நன்மையளிக்கும். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். குறிப்பாக சோளம், கேழ்வரகு, கம்பு போன்ற மானாவாரி பயிர்களில் அதிக வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும். வழக்கு, விவகாரங்களில் சுமாரான முடிவு கிடைக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். டிச.28க்கு பிறகு கால்நடை வளர்ப்பின் மூலம் போதிய வருவாய் வரும்.
பெண்கள் குடும்ப வாழ்வில் குதூகலமாக இருப்பர். டிச.21க்கு பிறகு உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். டிச.28க்கு பிறகு உங்களால் குடும்பம் சிறந்த நிலை அடையும். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். கணவரிடத்தில் அன்பு மேலோங்கும். கணவரின் குடும்பத்தார் உங்களை மதிப்புடன் நடத்துவர். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். ஜன.2,3,4ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். டிச.16,17, ஜன.12,13 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். சகோதரர்வழியில் பண உதவி கிடைக்கும்.
* நல்ல நாள்: டிச.16, 17, 23, 24, 25, 26, 29, 30, ஜன.2, 3, 4, 10, 11, 12, 13
* கவன நாள்: டிச.18, 19, ஜன.14 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:4, 8
* நிறம்: வெள்ளை, நீலம்
* பரிகாரம்:
● காலையில் நீராடியதும் சூரிய நமஸ்காரம்
● செவ்வாயன்று முருகனுக்கு நெய் தீபம்
● வெள்ளியன்று துர்க்கைக்கு அர்ச்சனை