Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சிறப்பான மாதம் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) சுக்கிரனால் நன்மை விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை)
துலாம்: ( சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) பிள்ளைகளால் பெருமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2018
10:57

இந்த மாதம் முக்கிய கிரகங்களில் ஒன்றான சுக்கிரன் ஜன.1ல் துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை செய்வார். செவ்வாய் டிச.17ல் கும்ப ராசியில் இருந்து மீனத்திற்கு மாறி நற்பலனைக் கொடுப்பார். 3-ம் இடத்தில் இருக்கும் சூரியனும், சனிபகவானும், 2-ம் இடத்தில் இருக்கும் குருவும் உங்களுக்கு நன்மை தரக் காத்திருக்கின்றனர்.  

புதன் டிச.28ல் விருச்சிகத்தில் இருந்து தனுசுவிற்கு சென்றாலும் அவரால் நன்மை தர இயலாது. அதே போல் உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் இருக்கும் கேது,10-ம் இடத்தில் இருக்கும் ராகு ஆகியோரும் சுமாரான பலனே தருவர். சனிபகவான் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார்.

குடும்பத்தில் பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். டிச.31,ஜன.1ல் பெண்கள்  உதவிகரமாக இருப்பர். டிச.27,28ல் விருந்தினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜன.7,8,9ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்களில்  தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியதிருக்கும். பிறர் உதவியை நாடாமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். டிச.25,26ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். டிச.28க்கு பிறகு திடீர் இடமாற்றம், பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் இருக்கவும். இருப்பினும் சுக்கிரனால் ஜன.1க்கு பிறகு  பதவி உயர்வு கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் சூரியனால் லாபம் அதிகரிக்கும். சேமிப்பும் உயரும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். மாத முற்பகுதியில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். சுக்கிரனால் ஜன.1க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் மூலம் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவீர்கள். டிச.29,30, ஜன.2,3,4ல் சந்திரனால் தடைகள் வரலாம். டிச.26,27ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களின் மூலம் வருமானம் காண்பர்.  ஜன.1க்கு பிறகு அரசு வகையில் விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.

மாணவர்கள் கடும்முயற்சி எடுத்தே படிக்க வேண்டியதிருக்கும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. அதே நேரம் குருவால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.

விவசாயிகள் நெல்,மஞ்சள், கரும்பு, எள், கிழங்கு வகைகளில் அதிக மகசூல் காண்பர்.  மேலும் பழவகைகளில் ஓரளவு வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக அமையும்.  கால்நடை வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது.

பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெற்று மகிழ்வர். சுக்கிரனால் உறவினர்களின் மத்தியில் பெருமையாக பேசப்படுவர்.
வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். பெண் காவலர்கள் உயர் பதவியை அடைய வாய்ப்பிருக்கிறது. சுய தொழில் புரியும் பெண்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். டிச.18,19,ஜன.14 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். ஜன.5,6ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

* நல்ல நாள்: டிச.16, 17, 18, 19, 25, 26, 27, 28, 31, ஜன.1, 5, 6, 12, 13, 14
* கவன நாள்: டிச.20, 21, 22 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்; 2, 3    நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:
● புதனன்று குலதெய்வ வழிபாடு
● ராகுகாலத்தில் பைரவருக்கு அர்ச்சனை
● பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் விளக்கு

 
மேலும் சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை) »
temple
பொதுநலனில் அக்கறை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

ராகு உங்கள் ராசிக்கு 3ல் அமர்ந்தும், குரு 9ல் ... மேலும்
 
temple
நல்லதை சிந்திக்க விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 10-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ... மேலும்
 
temple
திட்டமிட்டு பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 7ம் இடத்தில் இருக்கும் குருவும், 11-ல் ... மேலும்
 
temple
கண்ணியம் தவறாத கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த மாதம் வளர்முகமான காலம். சூரியன் சாதகமான ... மேலும்
 
temple
மனதாலும் தீங்கு செய்யாத சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உள்ள குரு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.