கொடைக்கானல்: கொடைக்கானல் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலை காக்க விளக்கேற்றும் விழா நடந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற தீர்ப்பளித்தது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் மற்றும் இந்து அமைப்புகள், குருமார்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்தது.
கொடைக்கானலில் நேற்று (டிசம்., 26ல்) மாலை மூஞ்சிக்கல் மாரியம்மன் கோயிலில் ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் சபரிமலையை காப்போம் என, சரணம் கோஷம் எழுப்பி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.