பதிவு செய்த நாள்
27
டிச
2018
02:12
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, கு.அய்யம்பாளையம் பகவதியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த, 21ல் சுற்றுவட்டார பக்தர்கள், காவிரி ஆற்றுக்கு சென்று, புனித நீராடி, தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீர்த்தக் குடங்களுடன் கோவிலை வந்தடைந்தனர். நேற்று முன்தினம் (டிசம்., 25ல்)மாலை, 5:30 மணிக்கு மேல், பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி கோவிலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து, கோவில் முன் தயாராக இருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள், பொங்கல், மாவிளக்கு படையல் வைத்து அபிஷேகம் செய்தனர். இரவு, வாண வேடிக்கை; நேற்று (டிசம்., 26ல்)காலை, கிடா வெட்டு, கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, மஞ்சள் நீராடல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.