பதிவு செய்த நாள்
27
டிச
2018
02:12
காஞ்சிபுரம்: திருவண்ணாமலை கிரிவலக்குழு சிவத்தொண்டு நற்பணி மன்றம் சார்பில், காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் கோவிலில், திருவாசகம் முற்றோதுதல் நடந்தது.
சமய குரவர் நால்வரில் ஒருவரான, மாணிக்கவாசகர் மார்கழி மாதத்தில், திருவண்ணா மலையில், திருவெம்பாவை பாடல்களை அருள செய்தார். அதை நினைவு கூரும் வகையில், மார்கழி மாத மகம் நட்சத்திரமான நேற்று (டிசம்., 26ல்), இந்த நிகழ்ச்சி நடந்தது.குழு செயலர், எஸ்.டி.கங்காதரதன் தலைமையில், திருவாசகத்தில் உள்ள, 31 பதிகங்கள் முற்றோதுதல் நடந்தது. சிவ பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.