தேவாரம்: தேவாரம் ஐயப்பன் கோயில் 62வது சக்தி, யாழி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மணி மண்டபத்திலிருந்து, ரங்கநாதர் கோயில் எதிரே அமைக்கப்பட்ட ஆசிரமத்திற்கு, சாஸ்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஜமின்தார் சிவராஜபாண்டியன் தலைமை வகித்தார். வர்த்தகர்கள் அய்யப்பசாமி, மனோகரன், கதிரேசன் முன்னிலை வகித்தனர். மாலையில் 7 கன்னிமார்கள் நெய்கொப்பரை ஏந்தி கரகம் கொண்டு வந்து சிறப்பு அபிஷேகத்தை துவக்கி வைத்தனர். சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அலங்கார ரதத்தில் சுவாமி நகர்வலம் நடந்தது. இரவு யாழி வளர்க்கப்பட்டு, அதிகாலை பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள். ஏற்பாடுகளை குருசாமி மணிகண்டன் தலைமையிலான ஐயப்ப பக்தர்கள் குழுவினர் செய்தனர்.
* சின்னமனுார்: ஐயப்பன் மணி மண்டபத்தில் படி பூஜை நடந்தது. குருசாமி லோகேந்திர ராஜன் நடத்தி வைத்தார். மணிகண்ட குருக்கள் சிறப்பு பூஜை நடத்தினார். ஐயப்ப பஜனை சபைத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.