பதிவு செய்த நாள்
28
டிச
2018
12:12
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஐயப்ப சுவாமி கோவிலில், மண்டல பூஜையையொட்டி, சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை விழா நேற்றுமுன்தினம் துவங்கியது. விழாவை முன்னிட்டு, மகா கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களிடம் இருந்து, பெறப்பட்ட அரிசி, தானியங்களை கொண்டு, சமையல் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.மாலையில், மண்டல பூஜை நடந்தது. பஞ்ச வாத்தியத்துடன் தேரில் புஷ்ப அலங்காரத்தில், திருவீதி உலா சென்ற ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன், முருகன், விநாயக பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவை ரோடு, உடுமலை ரோடு, பஸ்ஸ்டாண்ட், வெங்கடேசா காலனி வழியாக தேர் திருவீதியுலா நடந்தது. வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தது.