காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன்கோயிலின் அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியார். கவி பாடுவதில் வல்லவரான இவரது கனவில் முருகன் தோன்றி, ’சிவரகசிய காண்டம்’ என்னும் நூலில் உள்ள தனது வரலாறை கந்தபுராணம் என்னும் பெயரில் எழுதும்படி கட்டளையிட்டார். கச்சியப்பரும் தினமும் நூறு செய்யுள்களை சுவடியில் எழுதி சன்னதியில் வைத்து விட்டு நடை அடைத்து விடுவது வழக்கம். மறுநாள் காலையில் திறந்தால் சுவடியில் திருத்தம் செய்யப்பட்டிருக்கும். இந்த வகையில் குமரகோட்டம் முருகனே உலகின் முதல் எடிட்டராக இருந்தது தெரிய வருகிறது.