பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கு இன்னும் மூன்று மாதமே உள்ளன. எதிர்கால வாழ்வின் அஸ்திவாரமாக இந்த தேர்வுகள் இருப்பதால் எவ்வளவு மார்க் வருமோ... அதிக மார்க் வந்தாலும் நீட் தேர்வில் என்ன ஆவோமோ என மாணவர்கள் பயப்படுகின்றனர். முதலில் பய உணர்வை போக்க வேண்டும். அதற்கு சக்கரத்தாழ்வார், ராமானுஜரை வழிபட்டால் பயம் நீங்கும். மதுரை அழகர்கோவில் மலையிலுள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடிய பிறகு, சுந்தர்ராஜப்பெருமாள் கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை வணங்க வேண்டும். அத்துடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலுள்ள ராமானுஜரையும் வழிபட்டு வரலாம். தேர்வுபயம், மேடைபயம், பிறரிடம் பேசும் போது தயக்கம் ஆகியவை இந்த வழிபாட்டால் நீங்கும்.