மதுரை தமிழ்ச்சங்கத்தில் தருமி என்னும் புலவர் பாண்டிய மன்னரிடம் பொற்கிழி கேட்ட திருவிளையாடல் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். உண்மையில் அவர் பொருளாசையால் இதைச் செய்யவில்லை. பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்காமல், அவர்களுக்கு பணம் கொடுத்து திருமணம் செய்ய விரும்பினார். இதற்காக மதுரை சொக்கநாதரிடம் வேண்டினார். அவரது உயர்ந்த எண்ணத்தை நிறைவேற்ற, ’இறையனார்’ என்னும் புலவராக வெளிப்பட்ட சொக்கநாதரே, அவையில் நக்கீரருடன் வாதிட்டார். வரதட்சணைக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்தவர் புலவர் தருமியே. இவரது திருமணம் தை மாதம் பூச நட்சத்திரத்தில் நடந்தது.