பதிவு செய்த நாள்
02
ஜன
2019
12:01
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சர்ச்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு சிவகங்கை அலங்கார அன்னை சர்ச்சில் பிஷப் சூசைமாணிக்கம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பங்கு பாதிரியார் மரியடெல்லஸ் முன்னிலை வகித்தார். சருகணி அருகே செக்ககுடி மிக்கேல் அதிதுாதர் சர்ச்சில் பங்கு பாதிரியார் சூசைமாணிக்கம், காளையார்கோவில் அருளானந்தர் சர்ச்சில் பங்கு பாதிரியார் சூசைஆரோக்யசாமி, சூசையப்பர்பட்டினம் சூசையப்பர் சர்ச்சில் பங்கு பாதிரியார் டேவிட்குழந்தைநாதன்,சருகணி திருஇருதயங்களின் சர்ச்சில் பங்கு பாதிரியார் அம்புரோஸ்,ஆண்டிச்சியூரணி அடைக்கல அன்னை சர்ச்சில் பங்கு பாதிரியார் பிரான்சிஸ் தைரியநாதன் தலைமையில் திருப்பலி நடந்தது. இரவு முழுவதும் நடந்த பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
திருப்புத்துார்: திருப்புத்துார் கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. டி.இ.எல்.சி.,ஆரோக்கியநாதர் ஆலயத்தில் இரவு 7:00 மணிக்கு நிறைவு திருவிருந்து ஆராதனை நடந்தது. பின்னர் இரவு 10:00 மணிக்கு சிறப்பு துதி ஆராதனை நடந்தது. இரவு 11:30 மணிக்கு பழைய ஆண்டு ஆராதனை துவங்கியது தொடர்ந்து புத்தாண்டு ஆராதனையுடன் நிறைவடைந்தது. ஆர்.சி.அமல அன்னை ஆலயத்தில் இரவு 11:30 மணிக்கு பழைய ஆண்டிற்கு நன்றி வழிபாடும், புத்தாண்டு பிறந்ததும் சிறப்பு திருப்பலியும் நடந்தன. நேற்று காலை 8:00 மணிக்கு புத்தாண்டு திருப்பலி நடந்தது. பெந்தகொஸ்தே திருச்சபையில் இரவு 10:00 மணிக்கு நன்றி ஆராதனை நடந்தது.
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில், வழிவிடு முருகன் கோயில், வீர அழகர் கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்,அப்பன் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும்,அபிேஷக ஆராதனைகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச்,மற்றும் மானாமதுரை ஆர்.சி .,சி.எஸ்.ஐ.,சர்ச்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலிகளும்,தீபஆராதனைகளும் நடைபெற்றது.இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
காரைக்குடி: காரைக்குடி செக்காலை சகாயமாதா ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு கடந்த ஆண்டின் நன்றி வழிபாடு தொடங்கியது. நற்செய்தி பணிக்குழு உறுப்பினர் ராஜ்குமார் நடத்தினார். அதை தொடர்ந்து 12:00 மணிக்கு புத்தாண்டு திருப்பலி பாதிரியார் எட்வின் ராயன், உதவி பாதிரியார் ஒனாசியஸ் பிரபாகரன் தலைமையில் நடந்தது.
* செஞ்சை குழந்தை தெரசாள் ஆலயத்தில் பாதிரியார் எல்.சகாயராஜ் தலைமையிலும், அரியக்குடி வளன்நகர் குழந்தை இயேசு ஆலயத்தில் பாதிரியார் அந்தோணி மைக்கேல், ஆவுடைப்பொய்கை புனித அந்தோணியார் ஆலயத்தில் பாதிரியார் ராஜமாணிக்கம், மானகிரி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பாதிரியார் ஜெரால்டு தலைமையிலும் நள்ளிரவு புத்தாண்டு திருப்பலி நடந்தது. அதே போல் சி.எஸ்.ஐ., டி.இ.எல்.சி., ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
* கல்லல் இயேசு நம்மோடு சபையில் புத்தாண்டு வழிபாடு போதகர் அண்ணாத்துரை தலைமையில் நடந்தது.