பதிவு செய்த நாள்
02
ஜன
2019
06:01
சேலம்: சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகேவுள்ள, தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில், 49ம் ஆண்டு சதய விழா, கடந்த டிச., 2ல் தொடங்கியது. 27ல், புஷ்பாஞ்சலி படிபூஜையுடன், மண்டல பூஜை நிறைவடைந்தது.
28 முதல், நேற்று முன்தினம் (டிசம்., 31ல்) வரை, மதுரை சேஷ கோபாலன், கும்பகோணம் சங்கரராமன், ஸ்ரீவாசவி நண்பர்கள், அபர்ணா ரமேஷ் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று (ஜன., 1ல்), சபரிமலை ஐயப்பன் கோவிலின், முன்னாள் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி தலைமையில், மூலவர் ஐயப்பனுக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி நடந்தது. இரவு, 18 படிகளுக்கு திருப்படி பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் சுவாமியை தரிசித்தனர். இன்று (ஜன., 2ல்), ஹரீஷ்குமார் குழு இன்னிசை நிகழ்ச்சி, நாளை (ஜன, 3ல்), , வீரமணி ராஜூ குழுவினரின் பஜனை, ஜன., 4 இரவு, சுவாமி திருவீதி உலா, 5 காலை, லட்சார்ச்சனை நவக்கிரக யாகம், 13 காலை, பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் உஞ்சவிருத்தி ராதா கல்யாண உற்சவம், 15 மாலை, உலக நன்மை வேண்டி லட்ச தீப அலங்காரம் செய்யப்பட வுள்ளது. ஏற்பாடுகளை, ஐயப்பன் பஜனை மண்டலி தர்மசாஸ்தா ஆசிரம நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.