பதிவு செய்த நாள்
05
ஜன
2019
02:01
திருத்தணி: கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், மார்கழி மாதத்தை ஒட்டி, வெண்ணதாலி உற்சவம், நேற்று (ஜன., 4ல்) நடந்தது. திருத்தணி, பழைய பஜார் தெருவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது.
இக்கோவிலில், மார்கழி மாதத்தை ஒட்டி, நேற்று (ஜன., 4ல்) காலை, வெண்ணதாலி உற்சவ நிகழ்ச்சி நடந்தது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, உற்சவர் ஆண்டாள் ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில், நூற்றுக்கணக்கான பெண்கள், பக்தர்கள் பங்கேற்று, ரங்கநாதருக்குச் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.கோவில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட, திருத்தணி பொதுமக்கள் பங்கேற்று, அம்மனைத் தரிசித்தனர்.