பதிவு செய்த நாள்
05
ஜன
2019
02:01
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், 42வது அனுமன் ஜெயந்தி விழா துவங்கியது. கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில், ராமா ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இதில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் படி, நடப்பாண்டில், கடந்த, 3ல், அனுமன் ஜெயந்தி விழா துவங்கியது. அன்று மாலை மகாதானபுரம் கமலானந்தர் பஜனை மண்டலினி நாமாவளி பஜன் நடந்தது. நேற்று காலை, ரகுநாதன் குழுவினரின், விஷ்ணு சகஸ்ரநாமம் நிகழ்ச்சி நடந்தது. பின், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இன்று காலை, ஆஞ்சநேயருக்கு ஹோமம், பகலில் அபிஷேகம், அர்ச்சனை நடக்கிறது. பின் அன்னதானம் வழங்கப்படுகிறது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமிக்கு, 508 வடைமலை சாற்றப்படுகிறது. மாலை, 6:30 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.