ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவில் முன், விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பினர், சபரிமலை விவகாரம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நுழைவுவாயில் முன், விஷ்வ ஹிந்து பரிஷித் மற்றும் ஐயப்ப சேவா சங்கத்தினர், சபரிமலை விவகாரம் குறித்து, நேற்று (ஜன., 4ல்) விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.
இதில், ஐயப்பன் கோவிலின் வழிபாட்டு முறைகள், கோவிலின் வரலாறு, பெண்கள் ஐயப்பனை தரிசிக்க செல்வதால் ஏற்படும் பிரச்னைகள், கோவிலின் ஐதீகம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.