புதுச்சேரி: பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், புதிய மண்பானைகள் தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.பொங்கல் பண்டிகை, வரும் 15ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது.
அன்றைய தினம், புதிய அடுப்பில், புத்தம் புதிய மண் பானை வைத்து, புதிய அரிசியை போட்டு பொங்கல் வைத்து, சூரியனை வழிபடுவது பாரம்பரிய வழக்கமாகும்.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் புதிய மண் பானைகள், அடுப்புகள் செய்யும் பணி நடை பெறுகிறது.முருங்கப்பாக்கம், வில்லியனூர் உள்ளிட்ட இடங்களில் மண் பானைகள் மற்றும் அடுப்புகள் செய்யப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பானைகளை சந்தைக்கு அனுப்பும் பணிகளும் துவங்கி உள்ளது.