Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பணவரவு தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) நன்மை
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) நன்மை

பதிவு செய்த நாள்

14 ஜன
2019
03:01

கேதுவால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும்.  இந்த மாதம் சூரியன் சாதகமான 3-ம் இடத்திற்கு வருகிறார். அதோடு சுக்கிரன் ஜன.30ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். மேலும் பிப்.1க்கு பிறகு புதனும், செவ்வாயும் சாதகமான இடத்திற்கு வருகிறார்கள். இதனால் செல்வாக்கு அதிகரிக்கும்.

தற்போது 2-ம் இடத்தில் இருக்கும் புதனால் அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அவர் ஜன.17ல் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திற்கு செல்கிறார். அப்போது பகைவர் தொல்லை குறுக்கிடலாம். ஆனால் அவர் பிப்.1ல் ராசிக்கு 4-ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம். அதன்பின் நிலைமை சீராகும். அவரால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே குதூகலம் அதிகரிக்கும் நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். பிப்.1 முதல் செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணம்  வாங்கலாம். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.

சுக்கிரனால் தெய்வ அனுகூலம்  கிடைக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். ஜன.30,31ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதர வழியில் பண உதவி கிடைக்கும். ஜன.25,26ல் விருந்தினர் வருகையும், அவர்களால் நன்மையும் ஏற்படும். ஆனால் பிப்.6,7ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கியிருக்கவும்.

பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் கவலை முதலியன ஜன.17க்கு பிறகு மறையும். பிப்.1க்கு பிறகு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஜன.23,24ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.  

வியாபாரிகளுக்கு சூரியனால் லாபம் அதிகரிக்கும். சிலர் அரசு வகையில் பிரச்னையை சந்திக்க நேரிடலாம். வியாபாரிகளுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஜன.15,16,பிப்.11,12ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஜன.31க்குப் பின் சக கலைஞர்கள் மத்தியில் மதிப்பு உயரும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான வளர்ச்சி நிலையில் இருப்பர். பிப்.1க்குப் பின்  எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

குருபகவான்  உங்கள் ராசியில் இருப்பதால் மாணவர்களுக்கு மந்த நிலை, இருப்பிட மாற்றம் ஏற்படலாம். வீண்அலைச்சலும் ஏற்படும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அசட்டையாக இருந்து விட வேண்டாம் அதிக சிரத்தை எடுத்து படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.  

விவசாயிகள் கேழ்வரகு, சோளம், காய்கறிகள், பழவகைகளின் மூலம் நல்ல வருமானத்தைக் காணலாம். பிப்.1 முதல் செவ்வாய், புதன் சாதகமான நிலையில் இருப்பதால் புதிய சொத்து வாங்க யோகமுண்டு. கால்நடைகளின் வகையில் எதிர்பார்த்த வருமானம் இருக்கும்.

பெண்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். பிப்.3,4,5ல் ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். ஜன.17,18ல் சகோதரவழியில் பண உதவி கிடைக்கும். பிப்.1க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் முன்னேற்றம் அடைவர்.  செவ்வாயால் ஏற்பட்ட  அண்டைவீட்டார் பிரச்னை
இனி இருக்காது. உடல்நிலை சிறப்பாக இருக்கும்.

* நல்ல நாள்: ஜன.15,16,17, 18,23,24,25,26,30,31, பிப்.3,4,5,11,12
* கவன நாள்: ஜன.19,20 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3
* நிறம்: சிவப்பு, வெள்ளை

* பரிகாரம்:
●  வியாழனன்று குருபகவானுக்கு அர்ச்சனை
●  சனிக்கிழமையில் மகாவிஷ்ணுவுக்கு நெய் தீபம்
●  திங்கட்கிழமை சிவனுக்கு வில்வ மாலை

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோமவார விரதம் என்பது ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கடைப்பிடிக்கபடுகிறது. கார்த்திகை மாத சோமவாரங்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், 500 நடன கலைஞர்கள் பரத நாட்டியம், கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., துாரம் ... மேலும்
 
temple news
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆதிரெத்தினேஸ்வரருக்கு 108 வகையான மூலிகைகளால் ... மேலும்
 
temple news
கோவை; ராம்நகர், கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு கார்த்திகை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் நெல்லி மர பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar