பதிவு செய்த நாள்
17
ஜன
2019
02:01
சாத்தூர்: காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு சாத்தூர் வைப்பாற்று மணல் மேட்டுத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
சாத்தூர் வைப்பாற்றில் நடந்த இவ்விழாவில் சாத்தூர், வெங்கடாசலபுரம், படந்தால், ரெங்கப்பநாயக்கன்பட்டி, அயன்சத்திரப்பட்டி, சடையம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராம
மக்கள் பங்கேற்றனர். வீட்டில் சமைத்து கொண்டு வந்திருந்த உணவை உறவினர்கள், நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.
கோ.கோ. வாலிபால், கைபந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களை குடும்பத்தினருடன் விளையாடி மகிழ்ந்தனர். இதற்காக வைப்பாற்றில் பல்வேறு தற்காலிக கடைகள் போடப் பட்டிருந்தன. வடை, டீ, ஐஸ்கிரிம், பொம்மை விற்பனை அமோகமாக நடந்தது.
சாத்தூர் நகராட்சி சார்பில் வைப்பாறு சொக்கலிங்கம் பூங்காவில் குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது.சாத்தூர் டி.எஸ்.பி.,மதியழகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டிருந்தனர்.பகல் 2:00 மணி துவங்கி மாலை 6:30மணி வரை இத்திருவிழா நடந்தது.