குமாரபாளையத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு வழியனுப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2019 02:01
குமாரபாளையம்: குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள, பால முருகன் கோவிலில் பழனி பாதயாத்திரை செல்லும், 358 பக்தர்களுக்கு குரு சாமிகள் ஆறுமுகம், லோகநாதன் தலைமையில் வழியனுப்பு விழா நடந்தது. காவிரியாற்றிலிருந்து மேளதாளம் முழங்க, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடந்தது.
பக்தர்களின் சார்பில் பஜனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள கணபதிக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், விபத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன.