பதிவு செய்த நாள்
22
ஜன
2019
04:01
மேல்மருவத்தூர்: ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதியை, பங்காரு அடிகளார், நேற்று ஏற்றி வைத்தார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், நேற்று முன்தினம் (ஜன., 20ல்), கலசவிளக்கு பூஜையுடன், தைப்பூச ஜோதி பெருவிழா துவங்கியது.நேற்று (ஜன., 21ல்) அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், கோவில் நடை திறக்கப்பட்டது.
அதிகாலை, 3:30 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை, 4:00 மணிக்கு, கோ பூஜையும் நடந்தன.பின், மூல விளக்கை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்.தைப்பூச ஜோதி ஊர்வலத்தை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் துவக்கினர். மாலை, 6:45 மணிக்கு, தைப்பூச ஜோதியை, பங்காரு அடிகளார் ஏற்றினார்.
தமிழகம் மட்டும் இன்றி, பல இடங்களிலிருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்தனர்.