பதிவு செய்த நாள்
24
ஜன
2019
02:01
ஈரோடு: புது எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாநகர், 54 வார்டு நக்கீரர் வீதியில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர், புது எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (ஜன., 23ல்)நடந்தது. கடந்த இரண்டு மாதங்களாக கோவில் புனரமைப்பு பணி நடந்து முடிந்ததையடுத்து கடந்த, 22ல் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. நேற்று (ஜன., 23ல்) யாகசாலை பூஜை, கலசபூஜை நடந்தது.
அதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள், கலசங்களை ஊர்வலமாக எடுத்து கோவிலை சுற்றி வந்து, மூலவர் கோபுர கலசத்துக்கு அபிஷேகம் செய்தனர். மஹா தீபாராதனை காண்பிக்கப் பட்டது. கலச அபிஷேகம் செய்யும் போது திரளான பக்தர்கள், ஓம் சக்தி, பராசக்தி என, கோஷமிட்டு வணங்கி வழிபட்டனர். இதையடுத்து கோபுர கலச புனித நீரை, பக்தர்கள் மீது சிவாச்சாரியார்கள் தெளித்தனர். ஈரோடு எம்.எல்.ஏ., க்கள் தென்னரசு, ராமலிங்கம் உள்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் நடந்தது. இன்று (ஜன., 24ல்)முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.