பதிவு செய்த நாள்
28
ஜன
2019
11:01
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள், 24 மணிநேரம் காத்திருக்கின்றனர்.
திருப்பதி, திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, வார இறுதி விடுமுறை நாட்களில் அதிகரித்துள்ளது. அதனால் பக்தர்கள், வைகுண்டத்தில் உள்ள, 32 காத்திருப்பு அறைகளை கடந்து, வெளியில் உள்ள தரிசன வரிசையில், ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு, 24 மணிநேரத்திற்கு பின், தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. நேர ஒதுக்கீடு, விரைவு, திவ்ய தரிசனம் வாயிலாக பக்தர்கள், மூன்று மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்புகின்றனர். நேற்று முன்தினம், 86 ஆயிரம் பக்தர்கள், ஏழுமலையானை தரிசித்தனர். பக்தர்கள் வருகையை ஒட்டி, அன்று ஒரே நாளில், உண்டியல் மூலம், 3.60 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.