பதிவு செய்த நாள்
31
ஜன
2019
11:01
விருத்தாசலம்: மாசிமக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, விருத்தாசலம் ஆழத்து விநாயகர் கோவிலில் நேற்று கொடியேற்றம் நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், வரும் 10ம் தேதி மாசிமக பிரம்மோற்சவம் துவங்குகிறது. இதையொட்டி, ஆழத்து விநாயகர் கோவிலில் நேற்று கொடியேற்றம் நடந்தது.
நேற்று காலை ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர், விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு மேல், ஆழத்து விநாயகர் சன்னதியில் விநாயகர், சண்முக சுப்ரமணியர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர். அதன்பின், கொடி மரத்திற்கு பால், புனிதநீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை நடத்தினர். பகல் 11:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஆழத்து விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.